![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtaU3OfxSZ1QNMLq0Bstg1PCWb7kmxIouvlwGpQTF76Mu-Rn6UG88jc5NVhw52kcf6RbZLio8BywpbwX1TZCk-BjHsACNCbfLUWGm90WkMne7yXM1Bc-Z9XH5miyQHzMvXnR1OMHwrr1A/s320/ASIMANAND.jpg)
சுவாமி அஸிமானந்தாவின் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் சமீபத்தில் இந்தியாவில் நடந்த மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர்களின் பங்கினை நிரூபித்துள்ளது.
இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை ஒரு கும்பலை வழிநடத்தியதுடன், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ் ஸின் மூத்தத் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் ஒப்படைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள், இதுவரை இந்திரேஷ் குமாரை கைது செய்யாததுடன், இந்தியாவுக்கு எதிரான குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கினைக் குறித்து வெளிப்படுத்தவும் தயாராக இல்லை.
மத்திய அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை மேற்கொள்வதுடன், இவ்வழக்குகளில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்து அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.
மேலும் இவ்விவகாரத்தில் மனதை உறுத்தும் உண்மை என்னவெனில் தற்போது உண்மை வெளிக் கொணரப்பட்ட சூழலிலும் குண்டுவெடிப்புகளில் வழக்குகள் ஜோடிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது சிறைலிடைக்கப்பட்டோ அல்லது வழக்குகள் வாபஸ் பெறப்படாத சூழலிலோ உள்ளனர். நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்ததற்கு பதிலாக குண்டுவெடிப்புகளில் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்ய போலீஸ் துணிந்திருந்தால் ஏராளமான குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானது தடுக்கப்பட்டிருக்கும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் மற்றும் அந்த இயக்கத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழிலிருந்து மேல்மட்டம் வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுதான் இந்திய சமூகத்தின் விருப்பமாகும். இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1 comment:
ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிமிடத்திலேயே- இது இஸ்லாமிய தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று சொல்வதை அரசங்கம் முதலில் நிறுத்த வேண்டும், ஏனெனில் மேற்கூரிய இடங்களில் முதலில் அரசு அதை தான் சொன்னதாக நினைவு.
Post a Comment