Jan 10, 2011

குடிமகனே!! பெரும் குடிமகனே!!: ஒ போடு டாஸ்மாக்கு ஒ போடு!!


அன்று சில நூறு கடைகளை இருந்ததென்றால் இன்று பல்கிப் பெருகி 7,434 கடைகளாய் பெரும் ஆல விருட்சமாய் விரிந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். உலகெங்கும் பெப்சி கோக் கிடைப்பது போல தமிழகமெங்கும் டாஸ்மாக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வு பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்கும் நவீன யுகத்தில் டாஸ்மாக் மட்டும் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் சக்கை போடு போடுகிறது.

தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், என்று எதை வேண்டுமானாலும் கணக்கெடுங்கள். நீங்கள் என்னதான் கணக்கெடுத்தாலும் அவை யாவும் டாஸ்மாக் சில்லறை அங்காடிகளின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளும், மத்திய இரயில்வேயும் ஒரு நாளில் ஏற்றிச் செல்லும் பயணிகளை விட டாஸ்மாக்கிற்கு ஒரு நாளில் வந்து போகும் குடிமக்கள் மிகவும் அதிகம். இந்தியாவின் பிளாக்பஸ்டர் என்று சாதனையாக காட்டப்படும் எந்திரன் படத்தின் வருவாயெல்லாம் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலோடு போட்டி போட முடியாது.

டாஸ்மாக் அங்காடிகள் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் 16, 445 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2,464 கோடி ரூபாய் அதிகமாகும். சராசரியாக கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு 200 கோடி, நாள் ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் சென்ற ஆண்டை விட அதிகம் வருகிறது. தற்போது தினந்தோறும் 1.26 லட்சம் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானப் (IMFL) பெட்டிகள் விற்பனையாகிறது. ஒரு கேஸ் 12 பாட்டில்கள் வீதம் 57,000 கேஸ் பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.
இன்னும் சாதனை படைக்கும் டாஸ்மாக்கின் புள்ளிவிவரங்களை பாருங்கள். அலுவலக நாட்களில் சராசரி விற்பனை 45 கோடி என்றால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அது 53 கோடியாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாயாக இருந்தது இன்று இரண்டு மடங்கு அதிகமாயிருக்கிறது என்றால் பாருங்களேன்.

No comments: