Jan 28, 2011

நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி!! கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை!!!

450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு. இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி. டிசம்பர் 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது.

தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி விட்டு, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது. அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும். சிறுபான்மை மக்களை நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க செய்யும் இந்த தீர்ப்பு எதிர்கால இந்தியாவின் இறையாண்மையை கேள்வி குரியாக்குவதாகும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

No comments: