ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய நாடாக தெற்கு சூடான் வருகிற ஜூலையில் உதயமாகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக இனக் கலவரம் நடந்து வந்தது. தெற்கு சூடானில் வாழும் சுமார் 20லட்சம் மக்கள் தங்களுக்கு தெற்கு சூடான் என்ற தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தலைமை தாங்கி நடத்தி வந்தது. அதன் தலைவர் சால்வா கீர் போராட்டத்தை முன்நின்று நடத்தினார். போராட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து உலக நாடுகளின் வற்புறுத்தலை தொடர்ந்து மக்கள் வாக்கெடுப்பு நடத்த கடந்த 2005-ம் ஆண்டு சூடான் ஒப்புக் கொண்டது. அதன்படி தனி நாடு வேண்டுமா? என்பது குறித்து கருத்து அறிய தெற்கு சூடானில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், 99.57 சதவீத மக்கள் தனிநாடு கேட்டு வாக்களித்து உள்ளனர். இதன் மூலம் வாக்கெடுப்பில் அமோக வெற்றி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தெற்கு சூடானில் உள்ள 10 மாகாணங்களை சேர்ந்த மக்கள் வாக்களித்துள்ளனர். இதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மக்கள் தங்கள் எதிர்கால கனவை வெளிப்படுத்தினர்.
இது குறித்து மாணவர் சாந்தினோ அனெஸ் (19) கூறும் போது, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது பள்ளி குறித்து நான் கற்பனை செய்து பார்க்கிறேன். எங்கள் நாட்டில் இனி போர் நடக்காது. பயமின்றி பள்ளிக்கு சென்று படிப்பேன்” என்றார். மக்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு வருகிற ஜூலை மாதம் 9-ந் தேதி உதயமாகிறது.
அன்று இந்த நாட்டுக்கு முறைப்படி சுதந்திரம் வழங்கப்படுகிறது. போராட்டக்குழு தலை வராக செயல்பட்ட சூடான் மக்களின் விடுதலை இயக்க தலைவர் சால்வா கீர் தெற்கு சூடானின் அதிபராக பதவி ஏற்கிறார். சொந்த நாட்டிலேயே தங்களின் சுதந்திரத்திற்காக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு வாழ்த் துக்கள். அவர்களுக்கு பல லட்சம் தடவை நன்றி தெரி விக்கிறேன்” என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment