இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
1) உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
2) இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீ. உயரம் வரை கூட வளரும்.
3) இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக்திகள். மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
4) மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
5) இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.
6) இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.
7) வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.
இலந்தை பழமும் நினைவாற்றலும்:
1) தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.
2) இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஏற்றது.
3) இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொடர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலுண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment