பூர்னியா(பீகார்),ஜன.4:பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ராஜ் கிஷோர் கேசரி இன்று ஒரு பள்ளி ஆசிரியையால் குத்தி கொல்லப்பட்டார். அந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை கற்பழித்தாக புகார் அளித்திருந்தார். பூர்னியாவில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருபவர் பூனம் பதக். அதே பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். கடந்த மே மாதம் எம்.எல்.ஏ கேசரி தன்னை கற்பழித்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் இந்த புகார் குறித்து போலீஸ் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் பூனம் இன்று காலை கேசரியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். கேசரிக்கு அருகில் சென்றதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியுள்ளார்.இதையடுத்து அங்கிருந்தவர்கள் கேசரியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேசரியை குத்தியவுடன் அவரது ஆதரவாளர்கள் பூனத்தை தாக்கியதாகவும், அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதல்வர் நிதிஷ்குமார் பூர்னியா டிஐஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment