
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.
பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர்.ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.
2 comments:
ராச மட்டும் இல்லா திருமாவும் துக்கில போடனும் ஊழல் செய்யரதே
தப்பி இதற்கு வக்காழத்தா
ராச மட்டும் இல்லா திருமாவும் துக்கில போடனும் ஊழல் செய்யரதே
தப்பு இதற்கு வக்காழத்தா கொ்யல
Post a Comment