
தாத்தாச்சாரியர் அவர்கள் ஹிந்து மத வேதங்களை எல்லாம் கற்ற மாமனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது என்ற அளவுக்கு ஹிந்து மத வேதங்களில் அறிவு முதிர்ச்சி பெற்றவர். இவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் ஹிந்து மத வர்ணாசிரம கொள்கையையும், அதில் கொட்டி கிடக்கும் மூட நம்பிக்கைகள்,ஜாதி வெறி, ஏற்றதாழ்வுகள் குறித்தும் ஹிந்து மத மக்களுக்கு தெரிவித்த இந்த நூற்றாண்டி சிறந்த அறிவு ஜீவிகளில் இவரும் ஒருவர்.
அவர் எழுதிய ஹிந்துமதம் எங்கே போகிறது, சடங்குகளின் கதை போன்ற நூல்களில் இந்து மதச்சடங்குகளை,சம்பிரதாயங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள இந்நூல்கள் பெரிதும் உதவும். எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.
நூல்: சடங்குகளின் கதை, இந்துமதம் எங்கே போகிறது? ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.
3 comments:
ஹிந்து மத பெரியவர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் "இந்து மதம் எங்கே போகிறது?" தொடராக கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம்.
தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும்.
LINK:-
--> இந்து மதம் எங்கே போகிறது? <--
INFORM ALL YOUR FRIENDS
thank you for your link.
இந்த தளம் நமது பாரம்பரிய வேதங்கள் மற்றும் முறைகளை பகிர்வதால் அதை சார்ந்த கீழேயுள்ள தகவலையும் இங்கே பகிர்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
அக்னிஹோத்ரம் செய்வதற்கு உகந்த, நேரத்தை நீங்கள் இருக்கும் இடத்தின், (அட்சய ரேகை, தீர்க்க ரேகை), சூரிய உதய நேரம், சூரிய அஸ்தமன நேரம் கொண்டு துல்லியமான அக்னிஹோத்ர நேரத்தை மற்றும் அதன் காலத்திற்கு ஏற்ற மந்திரத்தை காட்டும் கடிகை என்னும் விண்டோஸ் போனிற்க்காக (Windows phone) மென்பொருள் செய்துள்ளேன். இது அக்னிஹோத்ரம் மட்டுமின்றி, மிக முக்கியமான ஹோரை, குளிகன், இராகுகாலம், எமகண்டம், சூரிய உதய மற்றும் மறைவு நேரங்கள், பருவ காலங்கள் மற்றும் வேறு பல விஷயங்களை காட்டுகிறது. இந்த கடிகையை விண்டோஸ் ஸ்டோரில் இங்கே (http://www.windowsphone.com/en-in/store/app/kadigai/0e6be181-bc0b-4555-85fe-d65def4a8998) பதிவிறக்கம் செய்யலாம்
Post a Comment