புதுடெல்லி,அக்.16:கஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது அல்ல என்றும் இணைக்கப்பட்டது என்ற அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கூற்றிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆதரவு தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லாஹ் இதுக்குறித்து தவறாக பேசியதாக தான் கருதவில்லை எனவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்பொழுது; "மைசூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது போன்றுதான் கஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கஷ்மீர் விஷயத்தில் சம்பவித்தது போலத்தான் மைசூர் ராஜாவும் இந்தியாவுடன் இணைப்பதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.கஷ்மீர் இந்தியாவின் சட்டத்திற்குட்பட்ட பகுதியாகும். கஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு தனி விசா வழங்கும் சீனாவின் நடவடிக்கைக் குறித்து அந்நாட்டிடம் அறிவித்துள்ளோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment