புதுடில்லி : காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில், உறுப்பினர்களின் கேள்விக்கு ப. சிதம்பரம் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஹூரியத் தலைவர் கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் யாரும் கல்லெறிந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகின. அவரது கருத்தை வரவேற்கிறேன்.
காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., பொதுச்செயலர் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, வெளியான கருத்து, ஐ.நா., அலுவலகத்தில், பணிபுரியும் பாகிஸ்தான் அதிகாரியின் கருத்தாகும். பாதுகாப்புப் படையினரின் சிறப்பு அதிகாரம் தொடர்பான வாக்குறுதியை காப்பாற்ற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் நிலவரம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடக்க உள்ளது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், அம்மாநில மக்களின் இதயங்களை வெற்றிக்கொள்வோம்.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment