மும்பை,ஜூலை.26:மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தீவிரவாதி பிரக்யா சிங் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவர் மீது மகாராஷ்டிரா திட்ட மிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின்(MCOCA) கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு எதிரான பிரக்யா சிங்கின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பிரக்யா சிங் மீது MCOCA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து போலீசார் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,கீழ்க்கோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தததோடு, பிரக்யா சிங் மீது MCOCA சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் பிரக்யாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரது வழக்கறிஞர் சுசில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து நேற்று சுசில் கூறுகையில்,"பிரக்யாவின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சல் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு வருகிறது. இரண்டு வாரத்துக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றத்தை கோருவேன்" என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment