நியூயார்க்: நியூயார்க் நகரின் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு ஒரு பெண் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.எப்போதும் மிகப் பரபரப்பாக இயங்கும் இந்த விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.40 மணியளவில் ஒரு மர்மப் பெண் தொலைபேசியில் பேசினார். விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டினார்.
அதே நேரத்தில் விமான நிலையத்தின் முதல் டெர்மினலில் ஒரு பை அநாதையாகக் கிடந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பயணிகள் அனைவரையும் விமான நிலையத்தை விட்டு அவசரமாக வெளியேற்றிவிட்டு பையை சோதனையிட்டனர்.ஆனால், அந்தப் பையில் குண்டு ஏதும் இல்லை. இதையடுத்து பயணிகளி்ன் உடமைகள் அனைத்தும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் பரபரப்பு நிலவியது.விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் குறித்து விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment