Jul 4, 2010

பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து SDPI கண்டன ஆர்பாட்டங்கள்.

எதேச்சதிகார மத்திய அரசின் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் SDPI சார்பாஹா கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் 3.7.2010 அன்று மாலை ஐந்து மணியளவில் மணிக்கூண்டு அருகில் வைத்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுசெயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகர தலைவர் S.நயினா முஹமது அவர்கள் தொகுத்து வழங்கினார் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பாசுலூர் ரஹ்மான் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கடுமையாக சாடினார்.
முன்பை விட கச்சா எண்ணெய் சர்வதேச விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. அதேபோல் வரியின் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும் அதிகரித்துள்ள நிலையில் எல்லா பொருட்களின் விலை வாசி உயர்வுக்கு காரணமாகின்ற பெட்ரோல் டீசல் விலை உயர்வை தனியார் முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுதான் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஈரான் எரிவாயு திட்டம் மற்றும் சேது சமுத்திர திட்டம் போற்றவற்றை விரைந்து செயல்படுத்தி முடித்திருக்கும் என்று கடுமையாக சாடினார்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது மைதீன், மாவட்ட செயலாளர் பாதுஷா மற்றும்தென்காசி செங்கோட்டை சங்கரன்கோயில் புளியங்குடி வாசுதேவநல்லூர் வடகரை ஆகிய பகுதிகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். கடையநல்லூர் நகர தலைவர் S. நயினா முஹமது ஆர்பாட்டதிர்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார் இறுதியில் கடையநல்லூர் நகர் தொகுதி கமிட்டி செயலாளர் யாசர்கான் நன்றி கூறினார்.

No comments: