உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்கள் இம்மாநாடு நடைபெறவிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளன.
சுவரொட்டிகளை பார்த்த வடகாடு பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிவா என்ற லெனின் விஜய் சீராளன ஆவணம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி சேந்தங்குடியைச் சேர்ந்த பகலவன் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் சிவா என்ற லெனின் முத்துசாமி பகலவன்இ சௌந்தர்ராஜன் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியிலும் செம்மொழி மாநாட்டை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்படிருந்தன. சுமை தூக்கும் பாதுகாப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் "நாதியற்ற தமிழர்களுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.
திருச்சி காந்தி மார்க்கெட் பாலக்கரை ஆகிய இடங்களில் அதிகமாக ஒட்டப்பட்டிருந்தது. பாலக்கரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த சுவரொட்டிகள் தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment