இங்கிலாந்து, ஜேர்மனி அணிகளுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில் 4:1 என இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது ஜேர்மனி! போட்டி தொடங்கி 20 வது நிமிடத்தில் ஜேர்மனி கோல் கீப்பர் அடித்த பந்தை, மறு முனையில் நின்று கொண்டிருந்த க்ளோசே பெற்றுக்கொண்டு கண் சிமிட்டும் நேரத்தில் கோலாக மாற்றினார். அப்போதிலிருந்தே இங்கிலாந்தின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்பட்டது.
இங்கிலாந்தின் களத்தடுப்பு மிக மோசகமாக இருக்க, 32 வது நிமிடத்தில் ஜேர்மனி அடுத்த கோல் அடித்தது. எதிர்பாராத விதமாக லாம்பேர்ட் அடித்த கோல், கோல் போஸ்ட்டின் உள்ளே விழுந்து மீண்டும் வெளியே வர, நடுவரின் தவறான தீர்ப்பினால், அந்த கோல் இங்கிலாந்துக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அப்சன் 37 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, இங்கிலாந்திற்கு நம்பிக்கை பெற செய்தார். முதல் பாதி வரை 2:1 என ஆட்டம் இருந்தது. ஆயினும் இடைவேளி முடிந்து போட்டி தொடங்கியதும், 67 வது 70 வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார் முல்லெர்! எட்டிப்பிடிக்க முடியாத இடைவெளியில், 4:1 என வீழ்த்தப்பட்டது இங்கிலாந்து.
முதல் சுற்றுப்போட்டிகளில், சேர்பியாவிடம் 1:0 என அடிவாங்கியிருந்தது ஜேர்மனி! சில சமயம் இப்படி அதிர்ச்சி தோல்விகள் கண்டாலும், இன்றைய போட்டி ஜேர்மனிக்கு மிக இலகுவாக வெற்றியை தந்தது. இங்கிலாந்தின் பலவீனமான ஆட்டம், ரசிகர்களிடம் கோபத்தை சம்பாதித்துள்ளது.இதுவரை மூன்று முறை உலக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது ஜேர்மனி! பிரேசில் ஐந்து மூறையும் இத்தாலி 4 முறையும் வென்றுள்ளன.
உலக கிண்ண போட்டிகளுக்காக இங்கிலாந்தும் ஜேர்மனியும் இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரண்டில் ஜேர்மனியும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இரு போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. இறுதிப்போட்டிக்கும் ஜேர்மனி 7 முறை வந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆர்ஜெண்டீனா - மெக்ஸிக்கோ அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் ஜேர்மனி காலிறுதி போட்டியில் விளையாடும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment