துபாய்: துபாயில் சர்வதேச அளவிலான கல்விக் கண்காட்சி ஏப்ரல் 14ம் தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் & எக்ஸிபிஷன் சென்டரில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.இதில், இந்தியா, ஜெர்மனி, அமீரகம், அமெரிக்கா, மலேசியா, எகிப்து, கொரியா, கனடா, ஈரான், லெபனான், ஹங்கேரி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இக்கண்காட்சியினையொட்டி கல்விக் கருத்தரங்குகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை முஹம்மது சதக் குழும கல்வி நிறுவனங்கள், சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் டாக்டர் ஜி.எம். சாமுவேல் நைட் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்து முடிப்பதற்குள்ளாகவே பணி வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது குழந்தைகளின் உயர்கல்விக் கனவை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
சென்னை முஹம்மது சதக் குழும கல்வி நிறுவனங்களின் சார்பில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் கே. ராகவேந்திரன் முதன் முறையாக தங்களது கல்விக் குழுமம் துபாய் கண்காட்சியில் பங்கேற்பதாக தெரிவித்தார். தங்களது நிறுவனம் தரமான கல்வியினை வழங்குவதில் சிறப்பிடம் வகிப்பதாக அவர் கூறினார்.
சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியின் சார்பில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையின் இயக்குநர் பேராசிரியர் எம்.ஏ. மணிகண்டன் அந்நிறுவனத்தின் சார்பில் பங்கேற்றார். இக்கண்காட்சியில் உள்ள வரவேற்பைத் தொடர்ந்து தங்களது நிறுவனம் பங்கேற்று வருவதாக தெரிவித்தார். இக்கண்காட்சியினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment