ஹைதராபாத்:கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரட்டை நகரங்களான ஹைதராபாத்-செகந்திராபாத் சகஜ நிலைக்கு திரும்பிய சூழலில் ஹைதராபாத் போலீஸ் தனது புலனாய்வைத் துவக்கியுள்ளது.இதுவரை 165 பேர் 5 மண்டலங்களிலிருந்து கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 152 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 100க்கு மேற்பட்ட மக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் கைதுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 15 வழிப்பாட்டுத்தலங்கள்,60 தனியார் வாகனங்கள்,18 அரசுப் பேருந்துக்கள் சேதமடைந்துள்ளன. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும் போலீஸ் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவின்போது நகர் முழுவதும் அமுலில் உள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை மோட்டார் சைக்கிளின் பின்புறமிருந்து செல்வது தடைச் செய்யப்பட்டுள்ளது. பெண்கள்,குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவையை முன்னிட்டு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நகரில் முழுமையான அமைதி திரும்பிய பிறகு ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்படும் என போலீஸ் நம்பிக்கை தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment