Mar 6, 2010

ஹிந்து சாமியார் நித்யானந்தாவின் அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஹிந்து ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்க போவதாக போலீசார் தெரிவித்தனர்.

2 comments:

mohamed said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரா, தயவு செய்து நித்யான்ந்தனின் ஆபாச வீடியோ கிளிப்புகளை அகற்றி விடுங்கள். இது தங்களுடைய BLOGற்கு ஏற்றதல்ல. <>

mohamed said...

சகோதரா, தயவு செய்து நித்யானந்தனின் ஆபாச வீடியோ கிளிப்புகளை அகற்றி விடுங்கள். இது தங்களுடைய BLOGற்கு ஏற்றதல்ல. <>