நித்யானந்தா சுவாமிகளின் காம லீலைகளை அம்பலப் படுத்தி அவரது நிஜ முகம் உலக மக்களுக்கு தெரியக் காரணமாக இருந்தவர் அவரது சீடர் லெனின் எனத் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நித்ய தர்மானந்தா என்ற லெனின் போலி சாமியார் நித்யானந்தாவிடம் உதவியாளராகவும் டிரைவராகவும் வேலை பார்த்தவர் எனத் தெரிகிறது .
இன்று சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்த லெனின் சாமியார் சம்பந்தப் பட்ட மேலும் பல சி.டி க்களை ஆணையரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது . மேலும் நித்யானந்தா குறித்து புகார் அளித்த லெனின் , நித்யானந்தா தன்னுடைய பெண் பக்தர்களிடம் பாலியல் கொடுமையில் ஈடு பட்டதாகவும் அதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ரஞ்சிதாவுடன் சாமியார் சல்லாபக் காட்சிகள் வெளியானவுடன் அதன் ஒளிபரப்புக்கு தடை கோரிய மனுவில் நித்யானந்தா சாமியார் தரப்பு லெனின் என்ற தனது சீடரே இதற்க்கு காரணம் என கூறி இருந்தது குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment