Mar 4, 2010

நித்யானந்த சாமியாரை தொடர்ந்து :சதுர்வேதி சாமியாருக்கு பிடிவாரண்டு.

சென்னை தியாகராயநகரில் ராமானுஜர் மிஷன் அறக்கட்டளையை நடத்தி வந்தவர் சதுர்வேதி என்கிற பிரசன்ன வெங்கட சரவண சதுர்வேதி. இவரது அறக்கட்டளைக்கு பக்தர்கள் பலர் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரியாக பணியாற்றிய சுரேஷ் என்பவரின் மனைவி மற்றும் மகளை 2000-ம் ஆண்டில் சதுர்வேதி சாமியார் மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது.மேலும், அக்டோபர் 2.2.2002 அன்று ரூ.5 லட்சமும், 2003-ம் ஆண்டு ரூ.7 லட்சமும் மிரட்டி வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சுரேஷ் கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சதுர்வேதி சாமியார், ஸ்ரீபதி, ஸ்ரீதர், பாலு, மனோகரன், அனந்தகிருஷ்ணன், தாமோதரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை சென்னை மகளிர் கோர்ட்டு விசாரித்து வருகிறது. 2005-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் நடந்த விசாரணையின்போது சாமியார் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் மனுக்களை அவர் சார்பில் வக்கீல்கள் தாக்கல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் சதுர்வேதி ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக, அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிபதி ஏற்காமல் தள்ளுபடி செய்தார். மேலும், சதுர்வேதி சாமியாருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்

No comments: