Mar 4, 2010

கர்நாடகாவில் பசுவதைத் தடைச் சட்டம் வாபஸ்.

பெங்களூரு:ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.க தலைமையிலான கர்நாடகா அரசு சென்ற கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் நிறைவேற்றிய பசுவதைத் தடைச் சட்டத்தை வாபஸ் பெற்றது.

மாநிலம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பே இதற்கு காரணமாகும். சட்டமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆகியோர்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுவதைத் தடைச் சட்டத்தை திடீரென வாபஸ் பெற என்னக் காரணம்? என எதிர்க்கட்சித் தலைவர் சீத்தாராமையா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில சட்டம் மற்றும் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார், "அரசுக்கு அது கொண்டு வந்த எந்தச் சட்டத்தையும் வாபஸ் பெற உரிமையுண்டு அதனடிப்படையில் இச்சட்டம் வாபஸ் பெறப்படுகிறது" என்றார்.

பசுவதைத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரமாக இருந்த பா.ஜ.க அரசு திடீரென இச்சட்டத்தை வாபஸ் பெறக்காரணம் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தபட்ட மக்கள், உழைக்கும் மக்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும், மிகவும் சத்துள்ள உணவாகவும் மாட்டு கறி இருப்பதால் இதை தடைசெய்வது என்பது முடியாத காரியம் என்பதனை இந்த பாசிச ஹிந்துத்துவா புரிந்துகொண்டால் சரி. அதிகமான மக்களால் உணவாக உட்கொள்ளப்படும் ஒன்றை தடைச் செய்வது என்பது யாராலும் முடியாத ஒன்று அதை தொட்டு எழுந்த கடும் எதிர்ப்பே இந்த சட்டம் வாபஸ் பெறப்பட காரணமாகும்.

No comments: