Feb 1, 2010

ஆர்.எஸ்.எஸ். VS சிவசேனா குடுமிச்சண்டை: உண்மைகள் வெளிவருகிறது.


புது தில்லி,​​ பிப்.1:​ மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தியர்கள் பிரச்னை காரணமாக சிவசேனை,​​பாஜக இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியைத் தழுவியது.​ காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வாழும் வட இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் ​(ஆர்எஸ்எஸ்)​ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.​ தற்போது இக்கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக பாஜகவும் ஆதரவு குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.​ ​


பிராந்திய அடிப்படையிலோ அல்லது மொழி அடிப்படையிலோ,​​ மத அடிப்படையிலோ மக்களைப் பிரிப்பதை ஆர்எஸ்எஸ் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்று மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி குறிப்பிட்டுள்ளார்.

"மராத்தியர்களுக்கு மட்டுமே மும்பை சொந்தமானது" என்று நிரூபிக்கும் நாள் விரைவில் வரும் என்று சிவசேனை தலைவர் மனோகர் ஜோஷி கூறினார். மும்பை விவகாரத்தில் அரசியல் நடத்த வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சிவசேனை செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.​ தேச பக்தியைப் பற்றியும் நாட்டு ஒற்றுமையைப் பற்றியும் எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் கற்றுத் தர வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

1992-ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்து-முஸ்லிம் கலவரத்தின்போது ஹிந்துக்கள் அனைவரையும் சிவசேனை அமைப்புதான் காப்பாற்றியது.​

அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எங்கே சென்றது என்று அவர் கேள்வியெழுப்பினார்.​ மகாராஷ்டிர-கர்நாடக எல்லைப் பகுதியில் பல மராத்தியர்கள் பாதிக்கப்பட்டனர்.​ ஆனால் அதுகுறித்து எவ்வித கருத்தையும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

மராத்தியர்களின் வழியில் குறுக்கிடும் எவரும் முதலில் சிவசேனைக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.​ தேசத் தந்தை மகாத்மா காந்தி கொல்லப்படுவதைத் தடுக்காத ஆர்.எஸ்.எஸ் இப்போது மட்டும் எப்படி பிற மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கப் போகிறார்கள்?​ என்றும் விமர்சித்துள்ளார்.

1 comment:

Sakthi said...

maanam ketttavargal...