டோக்கியோ: ஜப்பானில் உள்ள ருயூக்ஸ் தீவுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடு்த்து அந்த தீவே அதிச்சியில் குலுங்கியது இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானின் தெற்கில் உள்ள ஒகினோவா தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.3 புள்ளிகளாகப் பதிவானது.
ஜப்பானில் கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படும் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பல மணி நேரத்தக்குப் பின்னரும் அலைகள் ஏதும் ஏற்படாததால் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஒரு கட்டடம் இடிந்து 2 பேர் காயமடைந்தனர். பெரிய அளவில் சேதங்கள் ஏதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment