சிலியில் கடந்த ஐம்பதாண்டுகளில் மிகப்பெரியதான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தப்பட்சம் 78 பேர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பலம் பொருந்திய தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையானது பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் விடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில்ல் இருந்து ஜப்பான் வரையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தீவுப்பகுதியில் ஒரு சில இடங்களில் மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். ஹவாய் தீவுப்பகுதியில் இருக்கின்ற அனைத்து கரையோரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment