Feb 26, 2010

சாதி்க் கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

சென்னை அடுத்த பொன்னேரியில் 25.02,2010 அன்று ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாதி வன்கொடுமைகளை எதிர்த்து பொன்னேரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினரால் 25.02,2010 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மலையப்பன் பொன்னேரி நகரச் செயலாளர்(ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி) தலைமை வகித்தார்.ஆனந்தன் திருவள்ளுர் மாவாட்டச் செயலாளர் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி), அறிவுமதி திருவள்ளுர் மாவாட்டச் செயலாளர் (புரட்சிகர இளைஞர் முன்னணி), பொன்செல்வன் வழக்குரைஞர், லெனின் வழக்குரைஞர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் வேம்பத்துர் என்ற ஊரில் சாதியாதிக்கவாதிகளுக்கு கொம்புவாத்திய இசை ஊத மறுத்த முத்துக்கிருஷ்ணன் எனும் ஒடுக்கப்பட்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், மதுரை மாவட்டத்தில் ஊத்தங்குடியில் தேர் குடையைப் பிடித்த ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த நிரைமாத கர்பிணியான லட்சுமியை சாதி ஆதிக்கவாதிகள் அடித்து உதைத்தனர் அதேபோல் சேலம் மாவட்டத்தில் துளசம்பட்டியில் ஒடுக்கப்பட்டோர் தெருவில் தேர் வராததைக் கண்டித்து போராடிய ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை ஆதிக்கவாதிகள் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர், சிவகங்கை மாவட்டத்தில் டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர் என புள்ளி விபரங்களுடன் பேசினார்கள்.

மேலும் தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்ற சமத்துவபுரம் என நாடகம் ஆடுவதாக குற்றம் சாற்றினர். இறுதியாக சாதியாதிக்கவாதிகளை கைது செய்! சிறையில் அடை என பேசினார்கள்.ஆர்ப்பட்டத்தின் இறுதியில் தோழர்.வெங்கடேசன் பொன்னேரி கிளைச் செயலாளர் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ) நன்றி உரையாற்றினார்.

No comments: