9 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.இந்தியாவின் குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்திலிருந்து 9 இந்தியர்கள் மற்றும் சிப்பந்திகளுடன் சரக்கு கப்பல் ஒன்று துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இக்கப்பல் நைரோபி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,அக்கப்பலை ஆயுத முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அடங்கியிருந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள்,மீண்டும் தங்களது கைவரிசையை காட்டியிருப்பது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment