Feb 18, 2010

இலங்கை பாதுகாப்புச் செயலர் இந்தியா வருகை.

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்தும், அதன்பிறகு அங்கு ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்தப் பயணம் முழுமையான அதிகாரபூர்வப் பயணம் இல்லை என்றும், இந்தச் சந்திப்புக்கள் மரியாதை நிமித்தமான சந்திப்புத்தான் என்றும் இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்த அவர், அங்கு நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியை இரண்டு நாள் பார்வையிட்டார்.

No comments: