பிகார் மாநிலத்தில் கசாரி கிராமத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலில், பழங்குடி மக்கள் 12 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்குச் சொந்தமான பல குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள், நேற்றிரவு அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
வீடுகளுக்குத் தீயிட்ட அவர்கள், பின்னர், அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், எரியும் குடிசைக்குள் சிக்கி கருகிய நிலையில், மீதமுள்ளவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.
மாவோயிஸ்ட் இயக்கக்தைச் சேர்ந்த 8 பேரை, சமீபத்தில் அந்தக் கிராமத்தினர் பிடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பழி தீர்க்கும் வகையிலேயே மாவோயிஸ்டுகள் அந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக, அவர்கள் தாக்குதல் நடத்திய இடத்தில் விட்டுச் சென்ற துண்டுப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பாதுகாப்புப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 24 ராணுவத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து, பிகாரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment