Feb 18, 2010

துபாய்: மரண தண்டனையை எதிர்நோக்கும் 12 இந்தியர்கள்.

துபாய்: மதுக் கடத்தல், போட்டிக் குழுவைச் சேர்ந்த இருவரை கடத்திச் சித்திரவதை செய்து, ஓரினச் சேர்க்கை கொடுமையைச் செய்து, உயிரோடு புதைத்துக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 12 இந்தியர்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 12 பேரும் சேர்ந்து மதுக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போட்டி குழுவைச் சேர்ந்த இருவரைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, உயிரோடு வைத்து இருவரையும் புதைத்துக் கொன்று விட்டனர். 12 பேரும் கைது செய்யப்பட்டு துபாய் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

12 பேரில் 5 பேர் அந்த இருவரையும் இரும்புக் குழாய்கள், குச்சிகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் அந்த இருவரையும் ஒரு இடத்தில் குழி தோண்டி உயிரோடு புதைத்து மேலே மண்ணைப் போட்டு மூடி விட்டனர். 12 இந்தியர்களில் 3 பேர் கொத்தனார்கள் ஆவர். ஒருவர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். 8 பேர் வேலையில்லாமல் இருந்தவர்கள் ஆவர். அனைவரும் 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் ஆவர்.

No comments: