Feb 14, 2010

காதலர் தினமும் தீவிரவாத பாசிச ஹிந்துதுவாவும்.


கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் காவலர்களாக தங்களை காட்டிக் கொண்டு காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுக்க வன்முறையில் இறங்கும் இந்திய ஹிந்து பாசிஸ்டுகளின் உண்மையான நோக்கம் பண்பாடும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. காதலர் தினத்தின் பின்னணியில் கிறிஸ்தவ பாதிரியார் வேலண்டைன் ஒளிந்திருக்கிறார் என்பதேயாகும். மேலும் ஆண்டின் 365 நாட்களிலும் இவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் திருவிழாக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும்தான்.

கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் ஆபாசத்தையும்,வக்கிரத்தையும் தூண்டும் சிலைகளையும், ஓவியங்களையும் அகற்ற முற்படாதது ஏன்? ஏன் இவர்களே பாலியல் பலாத்காரத்திலும், வன்புணர்ச்சியிலும் கைதேர்ந்த கொடூரர்கள் என்பது குஜராத் இனப்படுகொலை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரங்களிலும் தெளிவான ஒன்று. இவர்கள் சார்ந்த மதம்தான் பெண்களின் உணர்ச்சிகளை ஊமையாக்கி வரையற்ற சுரண்டல்களை பெண்கள் மீது திணிக்கிறது. ஆகவே இவர்களுக்கு கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்றுக் கூறுவதற்கு அருகதை துளியும் கிடையாது.

மேற்குலகம் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்த கலாச்சாரச் சீரழிவுதான் காதலர் தினமும், அதுத்தொடர்பான கொண்டாட்டங்களும். காதலைப் பொறுத்தவரை அது இயற்கையாகவே மனித உள்ளங்களில் எழும் ஒன்று. அது உடல் இச்சையை மட்டும் சார்ந்தது அன்று. காதல் என்பது இணைகளுக்கிடையே பரஸ்பர அன்பு, பாசம், அரவணைப்பு, ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளல், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், இன்பத்திலும், துன்பத்திலும் உறுதுணையாகயிருத்தல், ஒருவருக்கொருவர் ஆறுதல்,பரஸ்பர நம்பிக்கை இவையெல்லாவற்றையும் இறுதிவரை பேணுவதே காதலின் உள்ளார்த்தமாகும்.

No comments: