டெல்லி: மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கணட் முதல்வர் சிபுசோரன் மற்றும் மேற்குவங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஆகியோருக்கு இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மாவோயிஸ்ட் அட்டகாதத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசு ஒரு முடிவான கருத்துக்கு வந்துள்ளதாகவும், அந்த முடிவை அமல்படுத்துவதற்கு மாநில முதல்வர்களின் ஆலோசனையும், ஒப்புதலும் தேவை என அமைச்சர் சிதம்பரம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment