Feb 20, 2010

அசாம் தேர்தலை குலைக்க ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை முறியடிப்பு.

கோக்ரஜார் (அசாம்), பிப்.20: அசாமில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து தீவிரவாதிகளால் ரயில் தண்டவாளத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டினை கூட்டுப்படையினர் கைப்பற்றினர். இதன் மூலம் பெரும் வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இத்தகவலை பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அசாம் உள்ளாட்சி தேர்தலை குலைக்க ஹிந்து தீவிரவாத அமைப்புகள் சதி செய்ததை உளவுத்துறை முறியடித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்து தீவிரவாதிகளால் கோக்ரஜார் மாவட்டம் சோட்டாமொதாதி அருகே ரயில் பாதை அருகே புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள, சக்திவாய்ந்த வெடிகுண்டு(ஐ.இ.டி) கைப்பற்றப்பட்டது. போலீஸôர் மற்றும் ராணுவத்தினர் கூட்டாக மேற்கொண்ட சோதனையின் போது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது செயல்இழப்பு செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையின் அருகே இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. முக்கியஸ்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட இருந்த இடத்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. அசாம் உள்ளாட்சி தேர்தலை குலைக்க ஹிந்து தீவிரவாத அமைப்புகள் சதி செய்ததை உளவுத்துறை முறியடித்துள்ளதாகவும் இது உளவுத்துறைக்கு கிடைத்த வெற்றி என்றும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவுத்துறை அதிகாரி கூறினார்.

No comments: