Feb 21, 2010

உத்தரகாண்ட் மாநிலத்தில் உளவு வேலையில் ஈடுபட்ட தீவிரவாத இஸ்ராயில் உளவாளி பிடிபட்டான்.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், முறையான அனுமதியில்லாமல், சாட்டிலைட் போனைப் பயன்படுத்தி உளவு வேலையில் ஈடுபட்ட இஸ்ராயில் உளவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவனது பெயர் டோரி இஷ்தியாக். கைது செய்யப்பட்ட இவனை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இவனை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
உத்தரகாசி மாவட்டம் தோடிதால் என்ற இடத்தில் சாட்டிலைட் போனுடன் இவன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். இதையடுத்து போலீஸார் இவனை பிடித்தனர். சாட்டிலைட் போனை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். ஆனால் இவனிடம் அனுமதி எதுவும் இல்லை. இதையடுத்து இவன் கைது செய்யப்பட்டான். டோரி கைது செய்யப்பட்ட விவரம் தீவிரவாத இஸ்ரேல் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: