Feb 13, 2010

கருணாவுக்கு மன்னிப்பு சரத் பொன்சேகாவுக்கு சிறைதண்டனையா? புத்த மடாதிபதிகள் கண்டனம்.


இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள். கருணா மற்றும் பிள்ளையான்mபோன்றவர்களுக்கு அரசு மன்னிப்பும் சலுகைகளும் வழங்கி விட்டு சரத் பொன்சேகாவையும் அவரது ஆதரவு மக்களையும் சிறையில் அடைத்திருப்பது சரியான செயல் இல்லை என்றும் உடனே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

No comments: