Feb 13, 2010
புனேயின் ஓஷோ ஆஸ்ரமம் அருகே குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தொடர்பா?
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஓஷோ ஆஸ்ரமம் அமைந்துள்ள பகுதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தார்கள். இதில் ஒருவர் வெளிநாட்டவர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
புனேயின் ஓஷோ ஆஸ்ரமம் அருகே உள்ள ஜெர்மன் பேக்கரியில் இந்த வெடிச்சம்பவம் ஏற்பட்டது. அந்த இடம், வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் கூடும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. சபாட் ஹவுஸ் அதற்கு மிக அருகில் உள்ளது.
சனிக்கிழமை மாலை என்பதால் அந்த இடத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்ததாகத் தெரிகிறது. மாலை 7.15 மணியளவில் பெருத்த சத்தத்துடன் ஜெர்மன் பேக்கரியில் வெடிச் சம்பவம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால், பலர் பேக்கரிக்குள் இருந்து வெளியில் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சம்பவதின் பின்னணியில் இதற்க்கு முன்பு மலேகன் குண்டு வெடிப்புகளை யார் நடத்தினார்களோ அவர்கள் இருபதாக இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்தியாவில் நடந்த கொண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு இதில் தொடர்பிருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டுகள் தாயரிக்கும் பொது வடித்ததா? என்பதை பற்றி உளவுத்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.
முதலில் காஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவம் எனக் கூறப்பட்டது. ஆனால், ஜெர்மன் பேக்கரியில் உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவருவதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் அசோக் சவாண் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசிச ஹிந்துத்துவா அமைப்பினர் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று காங்கிரஸ் ஆட்சிக்கு கேட்ட பெயரை உண்டாக்க திட்டமிட்டு சதி செய்வதாக பெயர் வெளியிட விரும்பாத மூத்த காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இதன் மூலம் இவர்கள் வருகிற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் இது நடக்காது என்றும், இந்தியாவில் ஹிந்துத்துவா செத்துவிட்டது அது மீண்டும் உயிர் பெற முடியாது என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment