Feb 13, 2010

ஒரிஜினல் காக்கிசட்டைகளுக்கு போட்டியாக டுப்ளிகேட் காக்கிசட்டைகள்.


சென்னை: சாருலதா போலி ஐபிஎஸ் அதிகாரியாக நடமாடி அனைவரையும் ஏமாற்றியது எப்படி என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். முன்பு சிவகாசி ஜெயலட்சுமி காவல்துறை போல் நடித்து அனைவரையும் ஏமாற்றினார் இப்ப அந்த லிஸ்டில் சாருலதா.

சாருலதாவின் அப்பா கட்டிடம் கட்டும் மேஸ்திரி,அம்மா பூ வியாபாரி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஆகும். நான் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தேன்.சென்னை ராணிமேரி பெண்கள் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், எம்.ஏ. பட்டப்படிப்பும் படித்துள்ளேன். தபால் மூலம் எம்.பில். படிப்பும் படித்துள்ளேன். பள்ளியில் படிக்கும்போதும், கல்லூரியில் படிக்கும்போதும் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பரிசு பெற்றுள்ளேன். அதன்பிறகு கபடி வீராங்கனையாகவும் புகழ் பெற்றேன்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு கபடி பயிற்சியாளராக இருந்து வந்தேன். அப்போது போலீஸ் அதிகாரிகளோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் மோசடி லீலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். பலபேர் என்னிடம் வேலை வாங்கித் தரும்படி கூறினார்கள். விழாக்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம், நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரி போல இருக்கிறீர்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் என்னை புகழ்வார்கள்.

எனவே, ஐ.பி.எஸ். அதிகாரியாக என்னை நானே சித்தரித்துக்கொண்டேன். சென்னை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் உதவி கமிஷனர் பழனிச்சாமி எனது குடும்ப நண்பர் ஆனார். அவரோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், நான் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்று சொன்னதை நம்ப ஆரம்பித்தார்கள்.

சென்னையில் உள்ள பல போலீஸ் நிலையங்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் நான் சிபாரிசுக்காக டெலிபோன் மூலம் பேசியுள்ளேன். அப்போது வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் இருக்கும் போலீஸ் பயிற்சி அகாடமியில் சூப்பிரண்டாக பணியாற்றுவதாக சொல்லுவேன். இதை உண்மை என்று நம்பி, நான் சொன்ன சிபாரிசுகளை எல்லாம் செய்து கொடுத்தார்கள்.

சென்னையிலும் 3 துணை கமிஷனர்களிடம் நான் போனில் பேசி காரியம் சாதித்துள்ளேன். அவர்களும் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசியில் ஐ.ஜி. ஒருவரிடம் பேசும்போது தான் சந்தேகப்பட்டு அவர் என்னை விசாரித்தார்.சாருலதா கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை சுமார் 20 பேரிடம் ரூ.17.5 லட்சம் ஏமாற்றியதாக தெரிய வந்துள்ளது. ஆனால் 9 பேர்தான் புகார் கொடுத்துள்ளனர்.

சிந்திக்க: சாருலதா காவல்துறையில் வேலை செய்யாமல் 'தான் காவல்துறை அதிகாரி" என்று ஏமாற்றினார். ஆனால் இந்த ஒரிஜினல் காவல்துறை அதிகாரிகள் என்னமோ தாங்கள் லஞ்சம் வாங்காதவர்கள் போல் பெரிய பில்டப் தங்களுக்கு போட்டியாக இப்படி ஆள் ஆளுக்கு கிளம்பிடானுன்களே என்ற கடுப்புதான் வேற ஒன்னும் இல்லேங்க. பாக்க போன சாருலதா இந்த ஒரிஜினல் காக்கிசிட்டை மிருகங்களை விட தேவல என்னுதான் சொல்லணும். போலீஸ் வேலை வாங்கி தருவதாக தானே சொல்லி பணம் வாங்கினார். ஆனால் இந்த ஒரிஜினல் காவல்துறையோ துணை போகாத தீய காரியங்களே இல்லை என்று சொல்லலாம். இவர்கள் என்னவோ லஞ்சம் வாங்காமல் போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பது போல் எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மாட்டைதான்.

No comments: