கலிஃபோர்னியா, அமெரிக்கா - பிரபல கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான செல்போனை செவ்வாயன்று அறிவித்துள்ளது. இணைய தளத்தை மேய்பவர்கள் கணிணியை விட அதிகமாக செல்போனை உபயோகிப்பதால் ஆன்லைன் விளம்பர உலகில் தனது மேலாண்மையை நிலைநாட்ட கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நெக்ஸஸ் ஒன் (Nexus One) எனப்படும் இந்த செல்போனை $179 விலைக்கு விற்பனையாகின்றன. இதனைக் குறிப்பிட்ட செல்போன் சர்வீஸான T-Mobile USA எனும் நிறுவனத்துடன் இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் வாங்க வேண்டும். ஆனால், எந்த செல்போன் சர்வீஸையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலான "unlocked" போன்கள் $529 விலைக்கு விற்பனையாகின்றன.
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் iPhone களுக்கு எதிராக நெக்ஸஸ் ஒன் போன்கள் போட்டியை அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment