Jan 19, 2010

மூட நம்பிக்கையின் உச்சமாக 8 வயது சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம்.


விழுப்புரம் : விஞ்ஞான வளர்ச்சியில் உச்சியில் நிற்கும் இன்றைய நவீன உலகில் விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வருடந்தோறும் ஊர் நலமாய் இருக்க ஹிந்து கோவிலில் வைத்து நடத்தப்படும் சடங்கான சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம் இவ்வாண்டு அனைத்து எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள சில கிராமங்களில் ஹிந்து கோவிலில் வைத்து நடத்தப்பட்டு வந்த இச்சடங்கு பல எச்சரிக்கைகளுக்கு பிறகு சில கிராமங்களில் நிறுத்தப்பட்டது. இவ்வாண்டும் அப்படிப்பட்ட சடங்குகள் நடத்தப்பட கூடாது என்று தேசிய மனித உரிமை கமிஷன் உட்பட பல அமைப்புகள் எச்சரித்திருந்தும் விழுப்புரம் அருகே உள்ள சின்னபள்ளிபுதுபட்டு எனும் கிராமத்தில் 8 வயது சிறுமிக்கும் தவளைக்கும் திருமணம் நடந்தது.

சாதாரண திருமணத்தில் நடத்தப்படுவது போல் சிறுமிக்கு எல்லா வித அலங்காரங்களும் செய்யப்பட்டு எல்லா சடங்குகளும் செய்யப்பட்டன. இது குறித்து கிராம மக்களிடம் கேட்ட போது வருடத்தில் ஒரு முறையேனும் இவ்வாறு செய்யாவிட்டால் பஞ்சம் போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிவித்தனர்.

சிந்திக்க: "இறைவன் நாடியதை அன்றி வேறொன்றும் உங்களை அணுகாது" என்ற திருமறை வசனத்தை இவர்கள் உணர்ந்து ஒரு இறை கொள்கையை ஏற்காத வரையில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் இதுபோல் மூட பழக்கவழக்கங்களை தடுக்கமுடியாது.

1 comment:

இப்னு அப்துல் ரஜாக் said...

//சிந்திக்க: "இறைவன் நாடியதை அன்றி வேறொன்றும் உங்களை அணுகாது" என்ற திருமறை வசனத்தை இவர்கள் உணர்ந்து ஒரு இறை கொள்கையை ஏற்காத வரையில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் இதுபோல் மூட பழக்கவழக்கங்களை தடுக்கமுடியாது.//
well said