Dec 17, 2009

தெலுங்கானா பிரச்னை


கிணறு வெட்ட பூதம் உருவான கதையாக ஆந்திராவில் நடந்து வரும் தொடர் கலவரங்கள் இந்திய மாநிலங்களின் அமைப்பை விவாதங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதை அடுத்து, தனி மாநிலக் கோரிக்கைகள் ஆங்காங்கே மீண்டும் பலமடைந்து வருகின்றன.

இந்தியாவை 58 மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று சமூக விஞ்ஞானி ரஷீதுத்தீன் கான் 1973ஆம் ஆண்டு கூறியிருந்தார். இந்திய மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதை விட சமூக கலாச்சார துணைப் பகுதிகளாக (socio-cultural sub-regions) பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இருந்தால் நிர்வாக இயந்திரம் சீராக இருக்கும் என்றும் 'பிரதேச பரிமானம்' என்னும் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறியிருந்தார்.

பஞ்சாபி பேசும் மாநிலங்கள் இரண்டு, தெலுங்கு பேசும் மாநிலங்கள் மூன்று, இந்தி பேசும் மாநிலங்கள் 20 என்ற வகையில் 58 மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரிக்கப்பட்டால் இந்தியா "அதிக தனித்துவம் இன்றி, ஆனால் பரந்த தன்மை" கொன்டதாக அமையும் என்று கான் வாதிட்டார்.

பரந்த தன்மை நிறுவப்பட வேண்டியது அவசியம். மொழி / வட்டார மொழி, சமுதாயக் கலவை, இனக் கூட்டம், பிறப்பு இறப்பு பற்றிய புள்ளிவிவரத் தோற்றம், அருகில் இருக்கும் பகுதி, கலாச்சார வகை, பொருளாதாரம் மற்றும் அதனடிப்படையில் அமைந்த வாழ்க்கை, முந்திய வரலாற்று நிகழ்வுகள், அரசியல் பின்புலம் மற்றும் மனநிலையிலான புனைவு ஆகியவற்றைக் கொண்டு வரையறுத்தல் வேண்டும் என்பது கான் அவர்களின் வாதம்.

மேற்குறிப்பிட்ட கணக்கீடு, தெலுங்கானா கிளர்ச்சியாளர்களின் வாதத்திற்குப் பயன் தரக்கூடியதாக உள்ளது. "நாங்கள் உண்மையில் தனியாக நிலைக்க வேண்டியவர்கள். பூகோள, வரலாறு, மொழி, கலாசார, சுற்றுச்சுழல், உணவு வழக்கம் எல்லாவற்றிலும் ஆந்திராவுடன் வேறுபட்டுள்ளோம். நாங்கள் வணங்கும் கடவுள் கூட வேறுதான்" என்கிறார் தெலுஙகான ஐக்கிய கார்யச்சாரனா கமிட்டியை சேர்ந்த பஸாம் யதகிரி. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பசல் அலி 1956ஆம் ஆண்டு பரிந்துரைத்தது போன்று தெலுங்கானா மாநிலம் எந்த சர்ச்சையும் இன்றி பிரிக்கப் படவேண்டும் என்கிறார் அவர்.

இந்தியாவை பல்வேறு கூறுகளாக பிரிப்பதால் அது ஒற்றுமை இன்மையை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய ஒன்றியங்களின் அமைப்பை நன்கு அறிந்தவர்கள் தயங்குகிறார்கள். இது அரசியல் நிர்ணயத்தில் ஒரு பாடமாக (அ) படிப்பிணையாக மெதுவாக நிலைத்துவிடக் கூடும். இனி புதிய மாநிலங்கள் உருவாக எவ்விதத் தடையும் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பின்னர் சிறுசிறு அடையாளங் கொண்டவர்களும் தங்களுக்கென தனி மாநிலக் கோரிக்கைகளை வைக்க அங்கீகாரம் கிடைத்துவிட்டது போலாகிவிடும்.

"மாநிலங்களின் தனித்துவத்தின் அங்கீகாரம், தேசிய தனித்துவத்தின் அங்கீகாரத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் அது உண்மையில்லை தற்போது தனி மாநிலம் கோரும் அனைவருக்கும் தனித்தனி மாநிலங்கள் அமைக்க அனுமதி வழங்கப் பெற்றாலும் கூட, 35 மாநிலங்களுக்கு மேல் நம்மிடம் இருக்க முடியாது" செம்மையான நிர்வாகத்திற்கு மாநிலங்களைத் துண்டாக்குவது என்ற கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. உத்திரப் பிரதேச மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை செம்மைப் படுத்த வேண்டுமெனில், அதனைச் சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும்.உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பன்டல்கண்ட் பகுதி மக்கள் தொடர்ந்து வறுமையில் வாடி வருவதை அறிந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பகுதிக்கு சுயாட்சி வழங்குவது குறித்து தற்போது ஆலோசித்து வருகிறது. தெலுங்கானா கோரிக்கையில் சரனடைந்த மத்திய அரசுக்கு உத்திர பிரசேத்தில் ஹரித் பிரதேசம் உள்பட மேலும் சில மாநிலங்களைப் பிரிப்பதற்கான வலுவான கோரிக்கைகள் இருந்து கொண்டு வருகின்றன.

"எங்கள் கோரிக்கை வெறும் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கப்பட்டதல்ல. மாறாக உண்மையான காரணங்களின் அடிப்படையில் அமைந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா தவிர்த்த மற்ற பகுதிகள் வளங்கள் பல பெற்றுள்ள நிலையில், தெலுங்கானா பகுதிக்கு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது" என்று தெலுங்கானா அதாரவாளர்கள் கூறுகின்றனர்.

"பஞ்சாப் மாநிலத்தைப் போன்று தெலுங்கானாவிலும் ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் தெலுங்கானா தெற்கு பஞ்சாபாக மாறவில்லை?" என்று கேட்கிறார் யாதகிரி. "அடிலாபாத் மற்றும் மகபூப் நகர் ஆகிய மாவட்டங்கள் இரண்டு நதிகளுக்கு மத்தியில் இருக்கும் போது, லட்சக் கணக்கான மக்கள் வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? செயற்திட்டங்கள், கொள்கைகள் எதுவுமே எங்கள் பகுதிக்கு சாதகமாக இல்லை" என்றும் அவர் கேட்கிறார்.

சிறிய நிலப் பரப்புடைய மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் வளர்ச்சி நன்றாக உள்ளது. மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிரச்சனை இல்லை. மாறாக மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் சுமுகமாக இல்லை எனில், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கேள்விக் குறியே.

No comments: