Dec 18, 2009
நேபாள் தலைநகர் மாவோயிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டது
நேபாள தலைநகர் காத்மாண்டுவை மாவோயிஸ்டுகள் கைப்பற்றி அதை சுயாட்சி பிராந்தியம் என்றும் அறிவித்துள்ளனர். நேபாளத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஏற்கனவே நிழல் அரசுகளை அமைத்துவிட்ட மாவோயிஸ்டுகள், தற்போது தலைநகர் காத்மாண்டுவையும் கைப்பற்றி அதை புதிய சுயாட்சி கொண்ட பிராந்தியமாக ஆக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றனர்.
மாவோயிஸ்டு அமைப்பின் தலைவர் பிரசண்டா, இன்று இந்த புதிய சுயாட்சி பிராந்தியத்தை ஏற்படுத்தும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதனை தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.மாவோயிஸ்டுகளின் இந்த அறிவிப்பினால் நேபாளத்தில் மீண்டும் ஒரு புதிய குழப்பம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மாவோயிஸ்டுகள் தங்களது இந்த முயற்சியை கைவிட வேண்டும் என ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி எச்சரித்திருந்தது.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல், மாவோயிஸ்ட் இராணுவ அமைப்பைச் சேர்ந்த சுமார் 5,000 பேர், இன்று மாலை காத்மாண்டுவில் உள்ள பலத்த பாதுகாப்பு மிக்க இடமான தர்பார் சதுக்கத்தில் அதிரடியாக புகுந்து அதனைக் கைப்பற்றினர்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மாவோயிஸ்டு தலைவர் பிரச்ண்டா, காதமாண்டுவை புதிய சுயாட்சி மாநிலமாக அறிவித்தார். மாவோயிஸ்டுகளின் இந்த அறிவிப்பால் நேபாளத்தில் புதிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment