Dec 30, 2009

மீண்டும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைவரிசை


புதுடில்லி : சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஒரே நாளில் இரண்டு கப்பல்களை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒரு கப்பலில் 26 இந்தியர்கள் இருக்கின்றனர். பிரிட்டனுக்கு சொந்தமான செயின்ட் ஜேம்ஸ் பார்க் என்ற இந்தக் கப்பல் ஸ்பெயின் நாட்டில் டரகோனா பகுதியில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. ஏடன் வளைகுடா பகுதியில் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். கடந்த ஆறு மாதங்களில் கடத்தப்பட்ட முதல் சரக்கு கப்பல் இது ஆகும்.

வளமான ஏடன் வளைகுடா : ஏடன் வளைகுடா பகுதி சர்வதேச கடல் வாணிபத்துக்கு மிகவும் முக்கியமான வழித்தடமாகும். வளமான இந்த ஏடன் வளைகுடா பகுதியில் சர்வதேச கடல் படையினரின் ரோந்தில் இருக்கின்றனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறியும் அடிக்கடி கப்பல் கடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கப்பல்கள் கடத்தப்பட்டு, அவற்றை விடுவிக்க வலுவான தொகையை பெற்றுள்ளனர் ‌கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: