Dec 30, 2009
பிஞ்சுக் குழந்தையை 36 ஊசிகளால் குத்திய கொடூரம்!
மதுவெறியில் இரண்டு வயது குழந்தையின் உடலுக்குள் சுமார் 36 ஊசிகளை குத்திப் பழிவாங்கியுள்ளார் பிரேசில் நாட்டவர் ஒருவர். இவற்றில் இறுதியாக இருந்த நான்கு ஊசிகளை நேற்றுப் பிற்பகல் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர். குழந்தையின் மார்பு, கழுத்து, வயிற்றுப் பகுதியில் மிக ஆழமாக ஊசி குத்தப்பட்டதால் அக்குழந்தை துடிதுடித்துப் போயுள்ளது.
கிட்டத்தட்ட 14 ஊசிகளை இதுவரை மருத்துவர்கள் குழந்தையின் உடம்பிலிருந்து எடுத்துள்ளனர். குழந்தையின் கழுத்தும் முதுகெலும்பும் சேர்ந்த பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த ஊசியையும் வைத்தியர்கள் மீட்டுள்ளனர்.
தாயின் இரண்டாவது கணவராகக் கருதப்படும் 30 வயதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனைவி மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்த நபர் குழந்தை மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊசிகளால் குத்துவதற்கு முன்னர் குழந்தை மீது மதுபானத்தை கொட்டியதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மனைவி மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்கு இந்தக் (இரண்டாவது) கணவருக்குப் பிஞ்சுக் குழந்தைதான் கிடைத்ததா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment