Dec 2, 2009

போபால் விஷ வாயு கசிவு 25 ஆண்டுகள் முடிந்தும் நீதிகிடைக்கவில்லை.


1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி இரவு, இந்தியாவின் போபால் நகரில் இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவில் பலர் இறந்தனர். இந்தச் சம்பவம் இடம் பெற்று 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முழுமையான நிவாரணம் இன்னமும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்திய அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் இழப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது.இது பாதிக்கபட்டவர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய அநீதி. அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு சாமரம் வீசும் இந்திய அரசு.

No comments: