Nov 9, 2009

பாசிச ஹிந்து மராட்டிய தீவிரவாதிகள் முஸ்லீம் எம்.எல்.ஏ. அபு அசிம் ஆஸ்மியை கடுமையாக தாக்கி அராஜகம்.


மும்பை, நவ. 9: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சமாஜவாதி கட்சி எம்.எல்.ஏ. அபு அசிம் ஆஸ்மி கடுமையாக தாக்கப்பட்டார்.
தீவிரவாதி ராஜ் தாக்கரே தலைமையிலான தீவிரவாத கட்சி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா(எம்என்எஸ்) கட்சியினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மராத்தி மொழியில் தான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.வேறு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தீவிரவாதி ராஜ் தாக்கரே எச்சரித்திருந்தார்

இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியது. முதல் நாளில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றனர்.உறுப்பினர்கள் அனைவரும் மராத்தியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.ஆனால் சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு அசிம் ஆஸ்மி மட்டும் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த தீவிரவாத நவநிர்மாண் கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ் வாஞ்சலே பதவிப் பிரமாண மேடையை நோக்கி ஆவேசமாக பாய்ந்து சென்று ஆஸ்மி பேசிய மைக்கை பறித்து கீழே வீசி எறிந்தார்.நவநிர்மாண் கட்சி தீவிரவாதிகள் ஆஸ்மியை முகத்தில் அடித்தும், சுற்றிவளைத்தும் சராமாரியாக தாக்கினார்கள்.

இந்தத் தாக்குதலை தடுக்க முயன்ற பெண் எம்.எல்.ஏ.மீனாட்சி பாட்டீல் உள்பட பல்வேறு கட்சியினரையும் எம்என்எஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இத் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட எம்என்எஸ் தீவிரவாதிகள் சிசிர் ஷிண்டே,ராம் கடம், ரமேஷ் வாஞ்சலே, வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

மராத்தியில் மட்டுமே பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்று கூறி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த இந்த அடிதடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளன.

No comments: