Nov 16, 2009

அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடாது

அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடாது என்றே தெரிவதாக அமெரிக்க முன்னாள் மூத்த தூதரக அதிகாரி டேவிட் ஸ்ட்ராப் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரியாகவும் பணியாற்றிய டேவிட், வடகொரியா வந்துள்ளார்.

இந்நிலையில்,அணு ஆயுத திட்டங்களை கைவிட வைப்பதற்காக அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு நாடுகள் மூலமாக,வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்கா முயன்று வந்தது.

ஆனால் அமெரிக்கா தங்களுடன் நேரிடையாக பேச்சு நடத்த முன்வந்தால் மட்டுமே பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள இயலும் என வடகொரியா நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா விரைவில் வடகொரியாவுக்கு தனது தூதர் ஒருவரை அனுப்ப தயாராகி வருகிறது.

இந்நிலையில்,வடகொரியா அமெரிக்கா மற்றும் ஆறு நாடுகள் குழுவுடன் பேச்சு நடத்தினாலும்,எதிர்காலத்தில் அந்நாடு தனது அணு ஆயுதங்களை கைவிட வாய்ப்பில்லை என்று டேவிட் தெரிவித்துள்ளார். கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments: