Nov 15, 2009

இந்திய காவல்துறை, இராணுவம், உளவுத்துறை ஆகியவை காவிமயம் ஆகிவிட்டது: ஹேமந்த் கர்கரேவின் மனைவி குற்றச்சாட்டு.


மும்பை, நவ. 15: மும்பையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் குண்டு துளைக்காத உடை மாயமானது குறித்து விசாரிக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவலை அந்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.முன்னதாக கர்கரேவின் மனைவி கவிதா கர்கரே, தனது கணவர் கொல்லப்பட்டபோதும், அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தார். ஆனால் பின்னர் அது மாயமாகிவிட்டது என்று புகார் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
"குண்டு துளைக்காத உடை காணாமல் போய்விட்டது' என்று மட்டுமே பதில் வந்தது என்றும் கவிதா கர்கரே குற்றம்சட்டியருந்தார்.தனது கணவர் கொல்லப்பட்டதின் பின்னணியில் ஹிந்து தீவரவாதிகளின் கை இருப்பதாக குற்றம்சாட்டினார். தனது கணவர் இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வடிபுகளின் பின்னணியில் பாசிச ஹிந்து தீவிரவாதிகளும்,ஹிந்து தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்து அதன் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த ஹிந்துதீவிரவாதிகள் என் கணவரை கொன்றுவிட்டார்கள்.இந்தியன் இராணுவம், உளவுத்துறை, காவல்துறை இதில் எல்லாம் நிறைய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இருந்து செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகள் எல்லாம் காவிமயம் ஆகிவிட்டது என குற்றம்சாட்டினார்.

No comments: