தனிநபர் கருத்து சுதந்திரம் என்பது அமெரிக்காவின் கொள்கை அல்ல; அது உலக உரிமை என்றும், அது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் ஆசியாவுக்கான தனது முதல் பயணமாக ஷாங்காய் வந்த ஒபாமா,அங்குள்ள அருங்காட்சியகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
அமெரிக்காவும்,சீனாவும் ஒன்றாக இணைந்து பணியாற்றாதவரை சில பிரச்னைகளை தீர்க்க முடியாது என்றும்," உலக உரிமையாக தாம் கூறும் கருத்து சுதந்திரத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment