
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 48 பேர் இறந்துள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், செங்கடலையோட்டிய ஜெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். அந்த நகரில் கடும் வெள்ளம் காரணமாக சாலைகளும், சுரங்கங்களும் சேதமடைந்துள்ளன. பல கட்டிடங்களும், பாலங்களும் இடிந்துபோயுள்ளன.வெள்ளத்தால் நிர்கதியான 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment