Oct 10, 2009

ஹிந்து திவிரவாத கும்பலை விட்டு விலகினார் ஜஸ்வந்த் சிங்.


அக்டோபர் 11,ஐதராபாத்: பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.ஆந்திர பிரதேச பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜஸ்வந்த்சிங் கூறியதாவது:

பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவி, ஆதாயம் தரும் பதவியல்ல. இந்தப் பதவியில் யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது லோக்சபா சபாநாயகரே. பதவிக்காக நான் அலையவில்லை. இருந்தாலும், பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

என் வாழ்நாளின் இறுதிப் பகுதியை, இந்தியா - பாகிஸ்தான் இடையேயும், இந்து- முஸ்லிம் இடையேயும் ஒற்றுமை உருவாக பாடுபடுவேன்.இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

(குறிப்பு)

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், தான் எழுதிய புத்தகத்தில் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா மட்டுமே காரணமல்ல, ஜவாஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோரின் தவறான அணுகுமுறைகளே பிரிவினைக்குக் காரணம் என எழுதியதாலும், குறிப்பாக வல்லபாய் படேல் குறித்து அவரின் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாலும், பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டார் என்பத குறிப்பிடத்தக்கது.

No comments: