Oct 15, 2009

வர்ணாசிரம ஹிந்து பாசிச பிராமண உயர் ஜாதியினர் வெறியாட்டம்


வேதாரண்யம், அக். 15: செட்டிப்புலம் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேசுவரர் கோயிலில் தலித் மக்கள் வழிபாடு மேற்கொள்ள மறுக்கப்படுவது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செப். 30ஆம் தேதி கோயில் நுழைவு போராட்டம் நடத்த முயன்று, கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கோட்டாட்சியர் மேற்கொண்ட சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதன்கிழமை அனைத்துத் தரப்பினருடன் தலித் மக்கள் வழிபாடு மேற்கொள்ள அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தலித் அல்லாத வர்ணாசிரம ஹிந்து பாசிச உயர் ஜாதியினர் காவல் துறை, வருவாய்த் துறையினர் மீது கல், கட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸôர் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தீண்டாமை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட 15 பேர் மற்றும் 300 பேர் மீது கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: